96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
#JustIN: காதல் கணவரை திடீர் விவாகரத்து செய்த பிரபல தமிழ் நடிகை.. நடுக்கடலில் கரம்பிடித்து, சில ஆண்டுகளில் சோகம்.!
மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நடிகை ஷீலா (31). இவர் பரதநாட்டிய கலைஞரும் ஆவார்.
கடத்த 2016ம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமான ஷீலா ராஜ்குமார் ஆறாது சினம், டூலெட், அசுரவதம், மண்டேலா, பிச்சைக்காரன் 2, நூடுல்ஸ், ஜிகர்தாண்டா டபுள்ஸ் எக்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சில தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.
இவர் திரௌபதி படம் வெளியான சில மாதங்கள் கழித்து, தனது காதலர் தம்பிச்சோழன் என்ற ராஜ்குமாரை காதலித்து கரம்பிடித்தார். நடுக்கடலில் இவர்களின் திருமணம் எளிமையாக நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், நடிகை ஷீலா ராஜ்குமார் தனது காதல் கணவரை விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன், நன்றியும் அன்பும்" என பதிவிட்டுள்ளார்.
திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன்
— Sheela (@sheelaActress) December 2, 2023
நன்றியும் அன்பும் @ChozhanV