மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பேட்டியின் போது கண் கலங்கிய வடிவேலு பட நடிகை.. இவருக்கு இந்த நிலைமையா.? ரசிகர்கள் வேதனை.!
தமிழ் சினிமாவில் மிகப்பெரும் காமெடி ஜாம்பவானாக வலம் வருபவர் வடிவேலு. இவர் 80களின் ஆரம்பம் முதல் தற்போது வரை திரைப்படங்களில் நடித்து வருகிறார். காமெடி நடிகராக மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிகராகவும், கதாநாயகனாகவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் வடிவேலுவுடன் ஒரு சில திரைப்படத்தில் ஜோடியாக நடித்தவர் சோனா. இவர் தற்போது பிரபல யு டூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். இப்பேட்டி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
அப்பேட்டியில் காதல் உறவைப் பற்றி தொகுப்பாளர் சோனாவிடம் கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த சோனா "எனக்கு நான்கு வருடங்களுக்கு முன்பே எல்லாம் முடிந்து விட்டது. அந்த உறவு எனக்கு நன்றாக இல்லை. சந்தோஷம் இல்லாத உறவை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்பதால் பிரேக்கப் செய்துவிட்டோம்" என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து பேசிய சோனா "பிரபல பத்திரிகை இதழிற்காக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தினார்கள் அதில் நான் கலந்து கொண்டேன். பின்பு நான் படுத்திருப்பது போல் புகைப்படத்தை பதிவிட்டு சினிமாவில் படுத்தும் பொழைக்கலாம் என்ற டைட்டில் வைத்திருந்தார்கள். இதைப் பார்த்து பல வருடங்களாக எனக்கு தூக்கம் வரவில்லை. மிகவும் வருத்தத்துடன் இருந்தேன்" என்று கண்கலங்கியபடி பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.