#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மீண்டும் சீரியலுக்குத் திரும்பிய 90ஸ் நடிகை.. உற்சாகத்தில் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் 90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சுகன்யா. இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு என பல முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதன் பின்னர் பட வாய்ப்பு குறைந்ததால் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். இதனிடையே பல்வேறு சீரியகளிலும் நடித்துள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என எதிலும் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அந்த சீரியல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.