பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
குடும்ப குத்துவிலக்குனா இவுங்கதா! பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதாவின் அழகான புகைப்படம்.
முந்தானை முடிச்சு என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் சுஜிதா.பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அவ்வாறு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெருமளவில் பிரபலமான தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இத்தொடரில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா, காவ்யா, குமரன், சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இத்தொடரில் கூட்டுகுடும்பம், அண்ணன் தம்பிகளின் பாசம் என மையமாக கொண்டு இந்த தொடர் ஒளிபரப்பாக்கி வருகிறது. தன் கணவரின் தம்பிகளுக்கு அண்ணியாக தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் விளம்பரப்பட தயாரிப்பாளர் தனுஷ் என்பவரை காதலித்து திருமண செய்து கொண்டார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் அவர், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். தற்போது மிகவும் அழகான சேலையில் புகைப்படம் ஒன்றை வெளியிடுள்ளார்.