குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
"அட.! இந்த நடிகையா இது.!" இணையத்தில் வைரலாகும் நடிகையின் சிறு வயதுப் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்.!
2017ம் ஆண்டு தமிழில் வெளியான "காதல் கண் கட்டுதே" திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அதுல்யா ரவி. முன்னதாக இவர் சில குறும்படங்களில் நடித்திருந்தார்.
இதையடுத்து இவர், கேப்மாரி, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவர் அழகுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
தற்போது இவர், ஹரிஷ் கல்யாணுடன் இனைந்து "டீசல்" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தமிழ் ரசிகர்கள் மனதில் இன்றும் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில், தற்போது இவரது சிறுவயதுப் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. 'சிறுவயதில் கூட அதுல்யா அழகு தான்' என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.