ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
என் மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய இதுதான் காரணம் - ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்!

நடிகர் கமல்ஹாசனின் மகளும் நடிகை மற்றும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் தனது மூக்கினை ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம். அப்படி செய்ய என்ன காரணம் என்று தற்போது அவர் விளக்கமளித்துள்ளார்.
தனது மூக்கில் சர்ஜரி செய்துகொண்டதை பற்றி அவர் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரான பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் தற்போது மீண்டும் இதுகுறித்து பேசியுள்ள அவர், "என் மூக்கு இருந்த விதம் எனக்கு பிடிக்கவில்லை. இதனால் மிகவும் கவலையில் இருந்தேன். சிலர் என் முகம் கூர்மையாக இருப்பதாக விமர்சித்தனர்.
எனவே என் மூக்கினை ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ள நானே முடிவு செய்தேன்; வேறு யாரும் என்னை வற்புறுத்தவில்லை. அதே சமயம் நான் ப்ளாஸ்டிக் சர்ஜரிக்கு விளம்பரம் செய்யவில்லை. இது தனிநபர் விருப்பம்" என கூறியுள்ளார்.