பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
மீண்டும் தன் பேவரட் இயக்குனருடன் கூட்டணி சேறும் தல அஜித் - தயாரிப்பாளர் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவின் அடையாளம் தல அஜித். தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் தல அஜித். இந்நிலையில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகிவரும் விசுவாசம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் தல அஜித். வீரம், வேதாளம், விவேகம் என மூன்று படங்களில் தொடர்ந்து சிவா இயக்கத்தில் நடித்துவரும் அஜித் நான்காவது முறையாக விசுவாசம் படத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் தொடர்ந்து ஒரே இயக்குனருடன் பணியாற்றிவருவதால் சற்று சோர்வில் உள்ளனர் தல ரசிகர்கள். இந்த நிலையில் பல வருடமாக விஷ்ணுவர்தன் கையில் வைத்து சுத்தி வந்த வரலாற்று கதை ஒன்றில் அஜித் நடிக்க சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தை குலேபகாவலி, அறம் ஆகிய படங்களை தயாரித்த கே ஜி ஆர் ஸ்டுடியோ தான் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வழக்கம் போல் படத்திற்கு இசை யுவன் சங்கர்ராஜா என்று கூறப்படுகிறது.
ஆனால் அஜித் அடுத்த படத்தில் வினோத் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த புது தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது இன்னும் உறுதியாகவில்லை. அதிரகாரப்பூர்வ தகவல் வரும் வரை காத்திருப்போம்.