மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விடாமுயற்சி படபிடிப்பை தள்ளிவைத்த அஜித்.. என்ன காரணம் தெரியுமா .?
தமிழ் திரை துறையில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் அஜித். இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அஜித்தை தல என்று ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர்.
இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பல பிரச்சனைகளை தாண்டி தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.
மேலும் இப்படத்தில் பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இது போன்ற நிலையில் அஜித் படப்பிடிப்பு தேதியை ஜனவரி 4ஆம் தேதிக்கு பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியதாக செய்திகள் இணையத்தில் வெளியாகி வருகின்றது.
அதாவது அஜித் தனது குடும்பத்துடன் நியூ இயர் கொண்டாட்டத்திற்காக லண்டன் செல்லவுள்ளதாகவும், மேலும் அஜித்தின் மகள் பிறந்தநாள் ஜனவரி 3ஆம் தேதி என்பதால் விடாமுயற்சி படப்பிடிப்பை 4ஆம் தேதிக்கு மேல் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார் இச்செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.