மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேண்டாம்.. இனி அப்படி சொல்லாதீங்க! திடீரென அஜித் வெளியிட்ட அதிரடி அறிக்கை! அதிர்ச்சியில் ஆடிப்போன ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் நடிகர் அஜித். இவருக்கென நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது படங்கள் வெளியாகும் நாட்கள், பிறந்தநாள் போன்றவற்றை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடுவர்.
அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் ஒவ்வொரு அப்டேட்டிற்காகவும், படம் ரிலீஸ்காகவும் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். மேலும் அவரை ரசிகர்கள் பல ஆண்டுகளாகவே தல என செல்லமாக பட்டபெயர் வைத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அஜித் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
— Suresh Chandra (@SureshChandraa) December 1, 2021
அதில் அவர், பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ அல்லது பேசும் போதோ எனது இயற்கை பெயரான அஜித்குமார், அஜித், ஏ கே என குறிப்பிட்டால் போதுமானது.
தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.