#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அஜித் 61 பட ஷூட்டிங்கிற்காக மாஸாக ஹைதராபாத் கிளம்பிய அஜித்! தீயாய் பரவும் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார் போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆக்ஷன் கலந்த இந்த படம் பிப்ரவரி 24ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனையும் படைத்தது.
இந்த வெற்றியை தொடர்ந்து, அஜித் எச்.வினோத் மற்றும் போனி கபூருடன் மீண்டும் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து 61வது படத்தில் நடிக்கிறார். இதில் பல ஆண்டுகள் கழித்து அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் அஜித் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
அஜித் 61வது படத்தின் ஷூட்டிங் மொத்தம் 75 நாட்கள் நடக்கவிருப்பதாகவும், படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னையில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில், AK 61 படப்பிடிப்பிற்காக நடிகர் அஜித் தற்போது ஹைதராபாத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.