மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தைக்கு பெயர் வைத்து மகளின் புகைப்படத்தை வெளியிட்ட ஆல்யா மானசா-சஞ்சீவ்..! குழந்தையின் பெயர் என்ன தெரியுமா.?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆலியா மானசா. ராஜா ராணி தொடரில் இவர் நடித்த செண்பா என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். தொடரில் நாயகனாக நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆலியா.
திருமணத்திற்கு பிறகு கர்ப்பமாக இருந்த ஆலியாவுக்கு கடந்த மாதம் 20 ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனை சஞ்சீவ் இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். குழந்தை பிறந்த செய்தி கேட்டதும் ரசிகர்களும், பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்துவந்தனர்.
இந்நிலையில் பிறந்த குழந்தைக்கு "ஐலா சையத்" என பெயர் வைத்துள்ளதாகவும், மேலும் குழந்தையோடு இருக்கும் புகைப்படம் ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஆலியா. மேலும், நான் தற்போது தாய்மையை அனுபவிக்கிறேன் எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.