மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் சேதுபதி படத்தில் இணைந்த ஏ.ஆர்.ரகுமான்.. வெளியான அசத்தல் தகவல்.!
விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு ஹிந்தி என மற்ற மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், ரஜினி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கின் இயக்கம் புதிய திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். கலைப்புலி எஸ் தானு தயாரிக்கும் இந்த திரைப்படம் விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் மிஷ்கின் படத்திற்கு முதன் முறையாக ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.