மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு குடும்பத்தினர் கொடுத்த அசத்தல் சர்ப்ரைஸ்.! வைரலாகும் கோலாகல கொண்டாட்ட வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 7வது சீசன் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கி ஒவ்வொரு நாளும் வித்தியாசமான டாஸ்க்குகளால் விறுவிறுப்பாக சென்ற நிலையில் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சீரியல் நடிகை அர்ச்சனா வெற்றியாளர் ஆனார்.
மேலும் மணி சந்திரா இரண்டாவது இடத்தையும், மாயா மூன்றாவது இடத்தையும் பிடித்தார் டைட்டில் வென்ற அர்ச்சனாவிற்கு 50 லட்சம் தொகை பரிசாக வழங்கப்பட்டது. மேலும் கார், பிளாட் போன்றவையும் பரிசாக அளிக்கப்பட்டது. அர்ச்சனாவின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் அதனை அர்ச்சனாவின் குடும்பத்தினரும் உச்சகட்ட மகிழ்ச்சியில் கோலகலமாக கொண்டாடியுள்ளனர். அதாவது நிகழ்ச்சி முடிந்து கோப்பையுடன் வீட்டிற்கு வந்த அர்ச்சனாவை குடும்பத்தினர் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி அவரே பிரம்மிக்கும் வகையில் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.