மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பா.ரஞ்சித் தயாரிப்பில் இணைந்த அசோக் செல்வன் மற்றும் சாந்தனு... ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை ரிலீஸ்.!
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் லெமன் லீப் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ப்ளூ ஸ்டார். இந்தத் திரைப்படத்தில் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு ஆகியோர் கதாநாயகர்களாக நடித்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்தத் திரைப்படத்தில் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு ஆகியோருடன் கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள், பிரித்திவிராஜன் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கோவிந்த் வசந்தா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான போர் தொழில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தத் திரைப்படத்தில் சரத்குமார் உடன் அவர் இணைந்து நடித்திருந்தார். அதேபோல் இந்தப்படத்திலும் சாந்தனு பாக்யராஜ் உடன் இணைந்து நடித்திருப்பதால் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ப்ளூ ஸ்டார் திரைப்படத்தினை எஸ்.ஜெயக்குமார் இயக்கி வருகிறார்.
A pleasant & musical journey awaits you all ✨#RailinOligal🚂, the first single from #BlueStar is set to release on Wednesday, 13th september💙⭐
— pa.ranjith (@beemji) September 11, 2023
Produced by @lemonleafcreat1 @officialneelam
Written and Directed by @chejai007 pic.twitter.com/dZMljG15cu
இந்நிலையில் திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. ரயிலின் ஒலிகள் என்று தொடங்கும் இந்த முதல் பாடல் நாளை வெளியாக இருப்பதாக பட குழு அறிவித்ததில் இருந்து ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.