மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா இத்தனை கோடிகளா... அசோக் செல்வனின் சபா நாயகன் படம் செய்த வசூல் சாதனை எவ்வளவு தெரியுமா.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அசோக் செல்வன். இவரின் வித்தியாசமான நடிப்பில் கடைசியாக வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதுடன் வசூல் சாதனையும் படைத்து. தற்போது அறிமுக இயக்குனர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் சபா நாயகன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சவுத்ரி என மூன்று ஹீரோயின்கள் நடித்து இருந்தனர். மேலும் மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்து உள்ளனர். இந்த படம் கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி வெளியானது.
தற்போது சபா நாயகன் படம் இதுவரை எத்தனை கோடி வசூல் சாதனை படைத்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. படம் வெளியாகி 2 வாரங்களுக்கு மேல் ஆன நிலையில் இதுவரை 14 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.