குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
கவிதையே தெரியுமா., என் கனவு நீதானடி.. பஞ்சுமிட்டாய் உடையில் பதறவைத்த அதுல்யா..!
நடிகை அதுல்யா வெளியிட்டுள்ள புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் கவிதை மழையைப்பொழிந்து வருகின்றனர்.
யூடியூப் வீடியோக்களின் மூலமாக சினிமா ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்தவர் அதுல்யா ரவி. இவர் நடித்திருக்கும் குறும்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதன் பின்னரே இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய ஏமாளி படத்தில் அதுல்யா முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
கோலிவுட்டில் "காதல் கண்கட்டுதே" என்ற படத்தின் மூலம் அதுல்யா நடிகையாக அறிமுகமானார். இதன்பின் நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ் மற்றும் ஜெய் நடிப்பில் வெளியான கேப்மாரி படத்தில் நடித்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'முருங்கைக்காய் சிப்ஸ்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அதையெல்லாம் கண்டுகொள்ளாது தனது திறமையை வெளிக்காட்டினார்.
சமூக வலைத்தளங்களில் நடிகை அதுல்யா எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில், அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும். அதுல்யா அடுத்ததாக பிரபல நடிகரான ஹரிஷ் கல்யாணுடன் ஒரு புதிய படத்தில் ஹீரோயினாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இணையத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனைக்கண்ட ரசிகர்கள் கவிதை மழையை பொழிந்து வருகின்றனர். சிலர் கவிதையே தெரியுமா, என் கனவு நீதானடி என பாடி வருகின்றனர்.