மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இருபக்கமும் வேகமாக வந்த லாரி! ஓடிவந்து நடுரோட்டில் உட்கார்ந்த குழந்தை! வைரலாகும் பதறவைக்கும் பகீர் வீடியோ!!
தற்காலத்தில் விபத்துக்கள் பெருமளவில் அதிகரித்த வண்ணம் உள்ளது. சாதாரணமாக சாலையில் செல்பவர்களே விபத்துக்குள்ளாகி பெரும் ஆபத்தான நிலைக்கு செல்லும் சூழலும் உருவாகிறது. இந்த நிலையில் அனைவரும் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். அதிலும் சாலையோரம் வீடுகளில் உள்ளவர்கள் தங்களது குழந்தைகளை முழு கவனத்தோடு பார்த்துக்கொள்ளவேண்டும்.
பொதுவாகவே குழந்தைகள் சுட்டித்தனம் செய்யக்கூடியவர்கள். ஓரிடத்தில் இருக்க மாட்டார்கள். ஓடிக்கொண்டே இருப்பார்கள். இவ்வாறு இரு பக்கமும் வாகனங்கள் வேகமாக வந்து கொண்டிருக்கும் நிலையில், குழந்தை ஒன்று நடுரோட்டில் அமர்ந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் பதற வைத்துள்ளது.
அதில் குழந்தை ஒன்று வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து நடுரோட்டில் அமர்ந்து கொண்டுள்ளது. அப்பொழுது இரு பக்கங்களும் பெரிய கண்டெய்னர் லாரி வந்துள்ளது. இந்த நிலையில் குழந்தையை கண்டு சுதாரித்துக்கொண்ட டிரைவர்கள் சாமர்த்தியமாக உடனே வண்டியை நிறுத்தினர். பின்னர் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஓடிச்சென்று குழந்தையை தூக்கி அருகில் இருந்தவர்களிடம் ஒப்படைத்துள்ளார். அதனை தொடர்ந்து பதறி ஓடி வந்த குழந்தையின் தாய் அவரை பெற்றுக் கொண்டார். இந்த வீடியோ சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க ஒரு பாடமாக வைரலாகி வருகிறது.