மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல இசையமைப்பாளருடன் முன்னாள் மனைவி ரொமான்ஸ்! நடிகர் பாலா கூறியதை பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் அன்பு என்ற படத்தில் மூலம் அறிமுனமானவர் நடிகர் பாலா. அதனை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்த அவர் அஜித்தின் வீரம் படத்தில் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார். பாலா இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரர் ஆவார்.
இவர் கடந்த 2010-ம் ஆண்டு அம்ருதா சுரேஷ் என்பரை திருமணம் செய்துகொண்டார்.
அவர்களுக்கு அவந்திகா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் பாலா மற்றும் அம்ருதா இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து பாலா எலிசபெத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையில் அம்ருதா இரு முறை விவாகரத்து பெற்ற மலையாள இசையமைப்பாளரான கோபி சுந்தருடன் நெருக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளிவந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் அம்ருதாவும் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை 'என்னுடையது' என குறிப்பிட்டு பகிர்ந்திருந்தார்.
இதுகுறித்து ரசிகர் ஒருவர் நடிகர் பாலாவிடம் கேள்வி எழுப்பிய நிலையில் அவர், தான் மனைவி எலிசபெத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், புதிய வீட்டை கூட வாங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது முன்னாள் மனைவியின் காதல் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அவர் மகிழ்ச்சியாக இருக்க பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்.