மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குணமடைந்து நலம் பெற, எம்.ஜி.ஆருக்கு செய்ததை எஸ்.பி.பிக்கு செய்ய அழைப்புவிடும் இயக்குனர் பாரதிராஜா!
பிரபல பின்னணி பாடகர் எஸ். பி.பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த 5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவ்வப்போது அவரது உடல் நலத்தில் பின்னடைவு ஏற்படுவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், திரைபிரபலங்கள், ரசிகர்கள் பலரும் பாடகர் எஸ்.பி.பி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனைகள் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா, எஸ்.பி.பி உடல்நலம் குணமாக வேண்டி கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திரு.இளையராஜா, திரு.ரஜினிகாந்த், திரு.கமல்ஹாசன், திரு.வைரமுத்து திரு.ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அனைத்து திரைப்பட நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குநர்கள், இசை கலைஞர்கள், ஃபெப்சி அமைப்பினர், தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், ஊடக கலைஞர்கள் மற்றும் உலகமெங்கும் உள்ள இசை ரசிகர்கள் அனைவரும் நாளை மாலை 6 மணிக்கு தங்களுக்கு பிடித்த எஸ்.பி.பி பாடலை ஒலிக்கவிட்டு அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கூட்டுப் பிரார்த்தனைக்கு உலகமெங்கும் வாழும் மக்களை அன்புடன் அழைக்கிறேன் என கூறியுள்ளார்.
இதற்கு முன்பு எம்.ஜி.ஆர் அவர்கள் உடல்நலம் குன்றி வெளிநாட்டில் சிகிச்சையில் இருந்தபோது, இந்த மாதிரி ஒரு கூட்டுப் பிரார்த்தனை செய்தோம். அவர் அதிலிருந்து மீண்டு தமிழகத்தில் காலடி எடுத்து வைத்தார். அதேபோல் இந்த கூட்டுப் பிரார்த்தனை மூலம் எஸ்.பி.பியை மீட்டெடுப்போம் வாருங்கள். ஒன்று கூடுவோம். பிரார்த்திப்போம் என கூறியுள்ளார்.