மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இயக்குனர் சேரன் பிக்பாஸில் கலந்து கொண்டதற்கு இது தான் காரணமா! ஓபனாக கூறிய சேரன்!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3யில், பதினாறு போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் இயக்குனர் சேரன் அவர்கள். இந்த வயதில் இவர் ஏன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தார் என பலரும் நினைத்தனர்.
அந்த நினைப்பை முறியடிக்கும் வகையில் கிட்டத்தட்ட 70 நாட்களை கடந்த வீட்டில் இருந்து வெளியேறினார். சிலர் தேசிய விருது, தமிழக விருது வாங்கிய இயக்குனர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான காரணம் என்ன என்பது பலரின் கேள்வியாக இருந்து வந்தது.
அவர் வீட்டில் இருக்கும் போது லாஸ்லியா, கவின் காதலில் தலையை நுழைத்தது பலருக்கு வெறுப்பாக இருந்தது. அதன் பிறகு மீரா மிதுன் இவரிடம் நடத்து கொண்டதை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவையெல்லாம் தேவையா என மனம் வருந்தினர்.
அவை அனைத்தையும் தாண்டி வீட்டில் இருந்து வெளியேறிய சேரன் அவர்கள் பல நாட்கள் கழித்து தான் ஏன் பிக்பாஸிற்கு சென்றேன் என்ற காரணத்தை கூறியுள்ளார். அதாவது தன்னைத்தானே விளம்பரப்படுத்தி கொள்ள பிக்பாஸில் கலந்து கொண்டதாகக் கூறியுள்ளார்.