திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரிசார்ட்டில் பிக்பாஸ் பிரபலம் ஜோவிகா செய்த செயல்.!வனிதா விஜயகுமாரை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!?
தமிழ் சினிமாவில் 80களின் பிரபலமான நடிகராக இருந்து வந்தவர் விஜயகுமார். இவரின் மகள் என்ற வாரிசு அடையாளத்தின் மூலம் அறிமுகமானவர் வனிதா. இவர் தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். படங்கள் தோல்வியை அடைந்து வந்ததால் திருமணம் செய்து கொண்டு திரைப்படங்களில் நடிப்பிலிருந்து விலகி விட்டார்.
பின்னர் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட குக் வித் கோமாளி போன்ற சில நிகழ்ச்சிகளின் மூலம் சின்னத்திரையில் பங்கேற்று வந்தார். இதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு தொடர் சர்ச்சையில் சிக்கினார் வனிதா விஜயகுமார்.
இது போன்ற நிலையில் இவரின் மகளான ஜோதிகா விஜயகுமார் 18 வயது பூர்த்தியடைந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். இவரின் செயலும், பேச்சும் ஆரம்பத்தில் மக்களை கவர்ந்தாலும் நிகழ்ச்சி செல்ல செல்ல மக்கள் ஜோதிகா விஜயகுமாரை திட்டி தீர்த்து வந்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாதியிலேயே எலிமினேட்டாகி வெளியே வந்த ஜோவிகா விஜயகுமார் தொடர்ந்து போட்டோ சூட் செய்து சமூக வலைதள பக்கங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது பாண்டிச்சேரி ரிசார்ட்டில் மாடலாக போட்டோ ஷூட் செய்து புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜோதிகா விஜயகுமாரின் அம்மாவான வனிதா விஜயகுமாரை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.