ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
உடல் எடை குறைந்து ஆளை அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஷிவானி.? என்ன ஆச்சு இவருக்கு.? ரசிகர்கள் கேள்வி.!?
ஷிவானி நாராயணன் தற்போது தமிழ் திரை துறையில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். மாடல் அழகியான ஷிவானி நாராயணன் முதலில் சின்னத்திரையில் சீரியலின் மூலம் தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒரு சில சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி மற்றும் பகல் நிலவு போன்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஷிவானி, விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் சக போட்டியாளரான பாலா என்பவரை காதலிப்பதாக செய்திகள் பரவி சர்ச்சைக்கு உள்ளானார்.
மேலும் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின்னர் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி பிஸியாக இருந்து வந்தார். இவ்வாறு திரைத்துறையில் மட்டுமல்லாது, சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாகவே இருந்து வருகிறார்.
அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு வருகிறார். தற்போது உடற்பயிற்சி செய்து மிகவும் உடல் மெலிந்து காணப்படும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஷிவானியா இது? ஆளே அடையாளம் தெரியலையே என்று அதிர்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் அவரின் வீடியோவை பார்த்து ரசித்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.