மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் வீட்டிற்குள் திடீர் என்ட்ரி கொடுத்த போட்டியாளர்கள்.! அட.. அதிரடி ட்விஸ்ட் இருக்கா.! வைரல் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், பூர்ணிமா,ரவீனா, மாயா,பிரதீப், நிக்சன், சரவண விக்ரம், விஷ்ணு விஜய், ஜோவிகா, அக்ஷ்யா மணிசந்திரா, வினுஷா, பாவா செல்லத்துரை,யுகேந்திரன், விஜய் வர்மா, விசித்ரா, அனன்யா ராவ், ஐஷு ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் வைல்ட் கார்டு என்ட்ரியாக அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, அன்ன பாரதி, பிராவோ ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். இந்நிலையில் 97 நாட்களை கடந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா, தினேஷ், மணி, விஷ்ணு, விஜய் வர்மா, மாயா ஆகியோரே உள்ளனர். பிக்பாஸ் சீசன் 7 தொடங்கி 100 நாட்கள் ஆன நிலையில் இன்று வெளியேறிய போட்டியாளர்களான அனன்யா மற்றும் வினுஷா பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் வினுஷாவிடம், தினேஷ் தம்பி பேசினானா? என நிக்சன் குறித்து கேட்டதற்கு, பேசினான், நான் ஷோவில் பேசிக்கொள்ளலாம் என கூறிவிட்டேன். 70 கேமராவிற்கு முன்பு அப்படி பேசிட்ட, 70 கேமராவிற்கு முன் அதையும் பேசிக்கலாம் என கூறியதாக தெரிவித்துள்ளார். முன்பு நிக்சன் வினுஷாவை உருவக்கேலி செய்து கிண்டலாக பேசியிருந்தார். அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் வெளியில் சென்ற பின்பு மன்னிப்பு கேட்பேன் என நிக்சன் கூறியிருந்தார். அதை குறிப்பிட்டே வினுஷா அவ்வாறு கூறியுள்ளார்.