#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சீக்ரெட் அறைக்கு அனுப்புமாறு கேட்டு கொண்ட பிக்பாஸ் பிரபல - காத்திருப்பில் ரசிகர்கள்.
பிக்பாஸ் சீசன் 3 தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மேலும் பிக்பாஸ் சீசன் 3 யில் காதல், சர்ச்சை என ரசிகர்களை சுவாரசியமாக கொண்டு செல்கிறது. போட்டி இறுதி கட்டத்தை நெருங்கிவருவதால் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
கடந்த வாரம் எலிமினேஷன் இல்லாத நிலையில் இந்த வாரம் கட்டாயம் எலிமினேஷன் உண்டு என கமல் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது என அனவைரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில் இந்த வாரம் இயக்குனர் சேரன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியது.
ஆனால் தற்போது வந்த தகவல் படி சேரன் வீட்டை விட்டு செல்ல இருந்தாலும், அவர் தனக்கு சீக்ரெட் அறைக்கு அனுப்புமாறு கேட்டு கொண்டாதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது என்று தெரியவில்லை. உண்மை என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.