திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#BiggBoss: தமிழகமே எதிர்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 6 அதிகாரபூர்வ அறிவிப்பு... அட்டகாசமான Promo வைரல்.!
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹிந்தி சின்னத்திரையில் அறிமுகம் செய்யப்பட்டு, பின்னாட்களில் தமிழ் சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக் பாஸ், இந்த நிகழ்ச்சி தமிழில் 5 சீசன்களை நிறைவு செய்துள்ளது.
தற்போது, 6வது சீசனுக்கான அறிவிப்புகள் முன்னதாகவே வெளியாகி இருந்த நிலையில், அது எப்போது தொடங்கும்? என பிக் பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தனர்.
இந்த நிலையில், விஜய் டிவி நிர்வாகம் பிக் பாஸ் Promo வீடியோ வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் கமல் ஹாசன் இன்னும் 5 நாட்களுக்குள் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதாக தெரிவித்துள்ளார். அதன்படி, அக். 9ம் தேதி பிக் பாஸ் தொடங்குகிறது.
பிக் பாஸ் சீசன் 6ஐ நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்பது ப்ரோமோ மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.