#Breaking: ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு: காலியானது ஈரோடு கிழக்கு தொகுதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவு தமிழக அரசியல்களத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. அவரின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.
காலியானதாக அறிவிப்பு
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அந்த தகவலை தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தி இருக்கிறது. இதன் வாயிலாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணி., பயந்தாங்கொள்ளி பழனிச்சாமி" - அமைச்சர் கே.என் நேரு நேரடி தாக்கு.!
இடைத்தேர்தல்
அத்தொகுதிக்கு பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் நடக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மறைந்தபின், இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அத்தொகுதியின் எம்.எல்.ஏ-வாக தேர்வு செய்யப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து, தற்போது ஈவிகேஎஸ் இளங்கோவனும் மறைந்ததால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்கிறது.
இதையும் படிங்க: #BREAKING: விசிக தலைமைக்கு அதிர்ச்சி தந்த ஆதவ் அர்ஜுனா; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!