"அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணி., பயந்தாங்கொள்ளி பழனிச்சாமி" - அமைச்சர் கே.என் நேரு நேரடி தாக்கு.! 



  Minister KN Nehru on AIADMK BJP Illicit Alliance 

சென்னை ராயப்பேட்டையில் வைத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட நபர்களுக்கு அசைவ உணவுகளும் வழங்கப்ட்டது. பொதுக்கூட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 

கள்ளக்கூட்டணி

இந்த விசயத்திற்கு திமுக தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் கே.என் நேரு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்த அதிமுக பொதுக்கூட்டத்தில், திமுக அரசை எதிர்த்து மட்டுமே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரெய்டு, இரட்டை இலை சின்னம் பறிபோய்விடுமோ என பயந்து, மத்திய பாஜக அரசுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில்லை. இது அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணியை உறுதி செய்கிறது. 

இதையும் படிங்க: சினிமாவில் சரிவை சந்தித்ததால் தான் விஜய் அரசியலுக்கு வந்தார்; திமுக ஆர்.எஸ் பாரதி பேட்டி.!

பயந்தாங்கொள்ளி

பழனிசாமியின் பயப் பட்டியலும் “எல்லாம் பயம் மயம்” எனச் சீனப் பெருஞ்சுவர் போல் நீள்கிறது. மோடி அரசின் மக்கள் விரோத சட்டங்களையும் திட்டங்களையும் ரெய்டுக்கு பயந்து ஆதரித்த கோழைதான் பழனிசாமி. இந்த பயந்தாங்கொள்ளி பழனிசாமிதான் அதிமுக பொதுக்குழுவில் வீராவேசமாகப் பேசுவது போல், காற்றோடு கத்தி சண்டை போடுகிறார் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "களத்திற்கே வராத அதிமேதாவி" - நடிகர் விஜய்க்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி.!