#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சூரரைப்போற்று படம் எனக்கு சுத்தமா பிடிக்கல.. வாண்டடா வந்து ரசிகர்களை கடுப்பேற்றிய பிக் பாஸ் பிரபலம்.. யார் தெரியுமா?
சூரரைப்போற்று திரைப்படம் தனக்கு பிடிக்கவில்லை என பிக்பாஸ் பிரபலம் ஒருவர் டிவிட் செய்துள்ளது சூர்யா ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாக பட்டையை கிளப்பி வருகிறது சூரரைப்போற்று திரைப்படம். கொரோனா காரணமாக திரையரங்குகளில் வெளியாகாமல் படம் நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஓடிடி தளத்தில் படம் வெளியாகியிருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் படம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சூரரைப்போற்று படத்தை பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை ஆகா ஓஹோ என புகழ்ந்துவருகின்றனர். குறிப்பாக சூர்யாவின் நடிப்பும், சுதா கொங்கராவின் இயக்கமும், ஜி.வி பிரகாஷின் இசையும் இந்த படத்தை வேற லெவலுக்கு எடுத்து சென்றுள்ளதாக ரசிகர்கள் புகழ்ந்துவருகின்றனர்.
இந்நிலையில் எனக்கு மட்டும்தான் சூரரை போற்று படம் பிடிக்கவில்லை போல என்ற பிக்பாஸ் புகழ் வைஷ்ணவி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த பதிவு சூர்யா ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திஉள்ளநிலையில் வைஷணவியின் இந்த பதிவுக்கு சூர்யா ரசிகர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
Am I the only person who didn't enjoy Soorarai Pottru?
— Wash Hands/Panic Carefully (@Vaishnavioffl) November 16, 2020