மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாய்ஸ் படத்தில் நடித்த "மணிகண்டனின்" தற்போதைய நிலை என்ன தெரியுமா? புகைப்படம்!
பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான படங்களில் ஓன்று பாய்ஸ். சித்தார்த், நகுல், பரத், மணிகண்டன், தமன் மற்றும் ஜெனிலியா ஆகியோர் இந்த படத்தில் நடித்திருப்பார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் நடித்திருப்பார்.
சங்கர் இயக்கிய அணைத்து படங்களும் மாபெரும் வெற்றிபெற்றிந்தாலும், பாய்ஸ் திரைப்படம் சற்று கலவையான விமர்சங்களையே பெற்றது. அதுமட்டும் இல்லாமல் பாய்ஸ் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்தது.
பாய்ஸ் படத்தில் நடித்த அனைவருமே தமிழ் சினிமாவில் பெரிய இடத்திற்கு சென்றுவிட்டனர். நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்னும் பல மொழி படங்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். அதேபோல பரத், நகுல் இருவரும் பெரிய ஹீரோ ஆகிவிட்டார்கள். தமன் மிகப்பெரிய இசை அமைப்பாளராக மாறிவிட்டார்.
ஆனால் இவர்களுடன் நடித்த மணிகண்டன் மட்டும் என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியவில்லை. பாய்ஸ் படத்தில் நடிக்க மணிகண்டனுக்கு அவ்வளவாக ஆசை இல்லையாம். ஏதோ நண்பர்கள் சொல்கிறர்கள் என்பதற்காக அடிஷனுக்கு சென்றுள்ளார். ஆனால் அவரது அதிர்ஷ்டம் அந்த ஆடிஷனில் தேர்வாகிவிட்டார்.
பாய்ஸ் திரைப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பை தந்தது. அதன்பின்னர் நடிகர் பரத், நாயகி சந்தியா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் காதல். காதல் படத்தில் முதலில் பரத்துக்கு பதில் மணிகண்டனைதான் நடிக்க அழைத்துள்ளனர். ஆனால் ஏதோ ஒருசில காரணங்களால் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் பரத்துக்கு கிடைத்துள்ளது.
கடைசியா 2014ல் ஒரு படத்தில் நடித்தார் மணிகண்டன். மொத்தம் இதுவரை 8 படங்கள் மட்டுமே நடித்துள்ள இவர் தற்போது கோடம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். ஒரு வேளை காதல் படத்தில் இவர் நடித்திருந்ததால் இவரும் ஒரு பெரிய இடத்தை அடைந்திருப்பாரோ என்னவோ!