பண மோசடி செய்தாரா நமீதாவின் கணவர்.. போலீஸ் தீவிர விசாரணை..
சேலம் இரும்பாலை பிரதான சாலையில் நிதி நிறுவனம் நடத்தி வருபவர் கோபால்சாமி, வயது 45. இவர் சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர். இவர் சூரமங்கலம் காவல் நிலையத்தில் மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துராமன் என்பவர் மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், "சிறு, குறு, நடுத்தர தொழில் வளர்ச்சி மைய கவுன்சிலின் ஆல் இந்தியா தலைவர் என்று கூறி அறிமுகப்படுத்திக்கொண்ட முத்துராமன், அந்த அமைப்பின் தமிழக சேர்மன் பதவியை எனக்கு வாங்கித் தருவதாக கூறி 3.50கோடி கேட்டார். முன்பணமாக 50லட்சம் நான் கொடுத்தேன்.
இந்நிலையில், நடிகை நமீதாவின் கணவரிடம் 4கோடி வாங்கிக்கொண்டு அவருக்கு அந்த பதவியை வாங்கி கொடுத்துவிட்டதாகவும், என் பணத்தில் 1 லட்சத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு மீதி 49லட்சத்தை ஒரு மாதத்தில் தருவதாக கூறி ஏமாற்றி விட்டார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து நமீதாவின் கணவர் சவுத்ரி, முத்துராமன் ஆகியோரிடம் விசாரித்த சூரமங்கலம் போலீசார், முத்துராமன் மற்றும் துஷ்யந்த் என்ற இருவரை கைது செய்துள்ளனர். மத்திய அரசின் பெயரால் பண மோசடி செய்தும், அந்த பணத்தில் சொத்துக்கள் வாங்கியிருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.