மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரஜினியை சந்தித்தது ஏன்? - சீமான் பேட்டி.. விபரம் உள்ளே.!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் ரஜினிகாந்துடன் திடீர் சந்திப்பு நடத்தினார்.
திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்து, அரசியலுக்கு வருவதாக அறிவித்து, பின் அதில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் பின்வாங்கி இருந்தார். அதேநேரத்தில், சீமான் தமிழ் தேசியம் அரசியலை முன்வைத்து, தொடர்ந்து களத்தில் பயணித்து வருகிறார்.
ரஜினி - சீமான் சந்திப்பு
தற்போது நடிகர் விஜயும் அரசியலுக்கு வருகை தந்துள்ள நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை களநிலவரம் ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே, நடிகர் ரஜினிகாந்தை அரசியல் ரீதியாக எதிர்த்த சீமான், தற்போது திடீரென போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் ரஜினியை சந்தித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: #Breaking : நாதக-வில் அடுத்த கூடாரம் காலி.. கோவை வடக்கு மா.செ கட்சியில் இருந்து விலகல்.!
அரசியல் சந்திப்பு
இந்த விஷயம் குறித்து கருத்து தெரிவித்த சீமான், அரசியல் ரீதியாகவே நாங்கள் சந்தித்துக்கொண்டோம். அரசியல், திரைப்பயணம் குறித்து நாங்கள் விவாதித்தோம். ரஜினியை சந்தித்து அரசியல்தான். நீண்ட நாட்களாக வரை சந்திக்க வேண்டும் என இருந்தேன். இருவரும் படப்பிடிப்பு, அரசியல்களம் என மாறுபட்டு பயணித்து இருந்தோம்.
மக்கள் தேர்வு செய்கிறார்கள்
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. அரசியலில் பல ஏச்சு-பேச்சுக்களை தாங்கி பயணிக்க வேண்டும். அவை குறித்து விவாதித்தோம். அன்பான, மரியாதையான சந்திப்பு இது. நல்ல தலைமைக்கான வெற்றிடம் உள்ளது. அதனை மக்கள் தான் தேர்வு செய்ய வேண்டும். மக்களே தலைவர்களை தேர்வு செய்கிறார்கள். இங்கு தலைவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.
சங்கி யார்?
உழைக்கும் மக்களின் உழைப்பை தெரிந்த தலைவர்களுக்கான வெற்றிடம் இருக்கிறது. மக்களின் உழைப்பை மதித்த தலைவர்கள் மறந்துவிட்டார்கள். அதற்கான வெற்றிடம் இருப்பதாலேயே நாங்கள் வருகிறோம். இங்கு வாக்கு அறுவடை செய்யப்படவில்லை, வாங்கப்படுகிறது. அவை மாற வேண்டும். அரசியல் என்பது மனிதனின் வாழ்வியல். திமுகவை எதிர்த்தால் சங்கி என்றால், காலையில் அப்பாவும் (முக ஸ்டாலின்), மாலையில் மகனும் (உதயநிதி) பிரதமர் நரேந்திர மோடியை சென்று சந்தித்தது என்ன?" என பேசினார்.
இதையும் படிங்க: #Breaking: நாம் தமிழர் மா.செ கட்சியில் இருந்து விலகல்; செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் ஆதரவாளர்கள்.. அடிதடி., மோதலால் பரபரப்பு.!