மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காமெடி மன்னன் கவுண்டமணி நிஜத்தில் இப்படிபட்டவரா.. வெளிவந்த உண்மை
தமிழ் சினிமாவில் பல நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் ஒரு காலத்தில் நகைச்சுவையில் முடி சூடாக மன்னனாக வலம் வந்தவர் நடிகர் கவுண்டமணி. இவர் தனது நக்கலான பேச்சுகளால் மக்கள் மனம் கவர்ந்தவர். ஒரு காலத்தில் திரைப்பட நாயகர்களுக்கு இணையாக பேசப்பட்டவர்.
இன்னும் மக்கள் மனங்களில் கவுண்டமணி, செந்தில் காமெடி காட்சிகள் நீங்கா இடம் பெற்றவையாக இருக்கின்றன. பல படங்கள் வெற்றி பெற்றதற்கு இந்த ஜோடியின் நகைச்சுவை காட்சிகளும் காரணமாகும். நடிகர் சத்யராஜுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகை சுகன்யா ஒரு பேட்டியில் "திரைப்படங்களில் மட்டுமல்லாது, இயல்பு வாழ்க்கையிலும் இவர் நிறைய நகைச்சுவை குணம் கொண்டவர். இவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். மேலும் பல ஹாலிவுட் படங்களை பார்க்க தன்னை அறிவுறுத்தி இருக்கிறார்" என்று நடிகை சுகன்யா கூறியிருந்தார்.
நடிகர் சத்யராஜ், இயக்குனர் மணிவண்ணன் ஆகியோர் இவரின் உற்ற நண்பர்கள். இயக்குனர் மணிவண்ணன் மறைந்து விட்ட நிலையில் வயோதிகத்தின் காரணமாக நடிகர் கவுண்டமணி தற்போது ஓய்வில் இருக்கிறார்.