பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இப்படி பண்ணுங்க., கண்டிப்பா ஐடி ரெய்டு வராது - பிக்பாஸ் ஜோடிகள் ஆர்த்தி வெளியிட்ட வீடியோ..! வைரலாகும் பதிவு..!!
தமிழில் நகைச்சுவை நடிகையாக படங்கள் மற்றும் சின்னத்திரையில் தொடர்ந்து நடித்து வருபவர் நடிகை ஆர்த்தி. இவர் விஜய் டிவியில் பிக்பாஸ் ஷோவில் பங்கேற்று பிரபலமடைந்த நிலையில், சமீபத்தில் நடந்த பிபி ஜோடிகள் நிகழ்ச்சியிலும் தனது கணவருடன் இணைந்து நடனமாடினார்.
அவர்கள் டைட்டில் ஜெயிக்கவில்லை என்றாலும், அவர் தான் குண்டாக இருப்பதையும் பொருட்படுத்தாமல் ரிஸ்க் எடுத்து நடனம் ஆடியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில், நடிகை ஆர்த்தி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவரது கையில் விதவிதமான தின்பண்டங்கள் இருக்கிறது. அத்துடன் அவர் பணத்தை உணவில் இன்வெஸ்ட் பண்ணுங்க., ஐடி ரெய்டு வராது என்று தெரிவித்துள்ளார். அவர் காமெடியாக பதிவிட்ட, "I invest money in food 😂 no IT raids 😂😂More interest " இந்த பதிவு ரசிகர்களை மிகவும் ஈர்த்துள்ளது.