மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை.! டிரைவர் அதிரடி கைது.!?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ். பல சீசன்களைத்தாண்டி 7வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு சமீபத்தில் நிறைவடைந்தது. 7வது சீசனில் வெற்றியாளராக அர்ச்சனா பரிசு வென்றது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு பிரபலம் அடைந்தவர் ஷெரினா. இவர் சமுத்திரக்கனி நடித்த 'வினோதய சித்தம்' திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் ஓரளவுக்கு பேசப்பட்டு வந்தாலும் ஷெரினா கதாபாத்திரம் ரசிகர்களை பெரிதும் ஈர்க்கவில்லை.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த போட்டியாளர்கள் பலரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து பிசியான நடிகைகள், நடிகர்களாக இருந்து வருகின்றனர். ஆனால் பெங்களூரைச் சேர்ந்த மாடலழகி செரினாவிற்கு பெரிதும் பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.
இந்நிலையில், கடந்த மாதம் 20ஆம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள காவல் நிலையத்தில் ஷெரினாவும், அவரது உதவியாளரும் புகார் அளித்துள்ளனர். ஷெரினாவின் கார் டிரைவர் அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு பிறகு அவருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார் என்று அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் ஷெரினாவின் கார் டிரைவர் இளையராஜாவையும், அவரின் நண்பரையும் கைது செய்துள்ளார். இச்செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.