மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவு!
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங். பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்த இவர் கடந்த ஜூன் 14 ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது இத்தகைய விபரீத முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காதலி ரியா சக்ரவர்த்தியின் மீது சுஷாந்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து , கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி அமலாக்கத்துறையினர் முன்பு ரியா சக்கரவர்த்தி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து, தன் மீது பீகார் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை மும்பை போலீசுக்கு மாற்ற ரியா சக்ரவர்த்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், சுஷாந்த் தற்கொலை தொடர்பாக பீகாரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை செல்லும் எனவும் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுஷாந்த் தற்கொலை வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி ரியா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.