1500 படங்கள்.. பிரபல நடன இயக்குனர் திடீர் மரணம்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!



Dance master rakesh passed away

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடன இயக்குனராக திகழ்ந்தவர் ராகேஷ் மாஸ்டர். இவர் 53 வயது நிறைந்தவர். ராகேஷ் மாஸ்டர் திருப்பதியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் ராமா ராவ். நடன இயக்குனரான பிறகு இவர் தனது பெயரை ராகேஷ் என மாற்றிக் கொண்டுள்ளார். அவர் பல மொழிகளிலும் 1500 திரைப்படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். 

அசாத்திய நடன திறமையை கொண்டு விளங்கிய ராகேஷ் மாஸ்டர் வெங்கடேஷ், நாகார்ஜுனா, மகேஷ் பாபு, ராம் பொதினேனி, பிரபாஸ்  உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களையும் ஆட வைத்துள்ளார். அவர் ஒரு வாரத்திற்கு முன்பு விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஐதராபாத் திரும்பியுள்ளார். அப்பொழுது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

dance master

தொடர்ந்து திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவரை ஐதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். நீரிழிவு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்த நிலையில் ராகேஷ் மாஸ்டர் காலமாகியுள்ளார். இவரது மறைவு செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.