#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாவ்! முதன்முதலாக தனது கியூட் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை டேனியல்! குழந்தையின் பெயர் இதுவா? வாழ்த்தும் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் பொல்லாதவன், பையா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரங்கூன், மரகத நாணயம் போன்ற பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் நடிகர் டேனியல். மேலும் அவர் இதற்கு தானே ஆசைப்பட்டாய் படத்தில் விஜய் சேதுபதிக்கு நண்பராக நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் ரீச்சானது.
அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன்2 வில் கலந்து கொண்ட இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நடிகர் டேனியல் சில நாட்களிலேயே தனது காதலியான டெனிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அண்மையில் இந்த காதல் தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான தகவலை டேனி தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மிகவும் உற்சாகமாக தெரிவித்திருந்தார்.
Happy to share , we have named our son “KAYSON HAYES DANIEL” thanks for all your blessings and wishes 🙏🏻 pic.twitter.com/zyVp3Go0X4
— Daniel Annie Pope (@Danielanniepope) July 19, 2020
இந்நிலையில், டேனியல் சமீபத்தில் முதன்முதலாக தனது மகனின் புகைப்படம் மற்றும் பெயரை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், இதைப் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன், நாங்கள் எங்கள் மகனுக்கு கேசன் ஹேயஸ் டேனியல், என்று பெயரிட்டுள்ளோம். உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி என கூறியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.