#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னடா இது தெய்வமகள் சத்யாவுக்கு வந்த சோதனை! புகைப்படம்!
சமீப காலமாக சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்படுபவர் சீரியல் நடிகை வாணி போஜன். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடர் மூலம் பிரபலமானவர்.
தெய்வமகள் சத்யா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு இவரது கதா பாத்திரம் பேசப்பட்டது. சீரியலில் நடிப்பதற்கு முன்பு பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்துள்ளார் வாணி போஜன்.
தெய்வமகள் தொடர் முடிவு பெற்றதை அடுத்து சன் டீவியில் ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு நடுவராக பங்கேற்றார். அதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிறுவர்கள் பங்கேற்கும் நகைச்சுவை தொடர் ஒன்றிற்கு நடுவராக பங்கேற்று வந்தார்.
தற்போது அணைத்து டீவி நிகழ்ச்சிகளும் முடிவு பெற்ற நிலையில் விரைவில் வாணிபோஜன் சினிமாவில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் மாடர்ன் லுக்கில் சின்ன திரை நயன்தாரா இருந்த அவர் சினிமாவிற்காக சில புகைப்படங்களை எடுத்துள்ளார். அதில் சேலை கட்டி, குடும்ப பெண்ணாக தோற்றமளிக்கிறார் வாணிபோஜன்.