மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அம்மாடியோவ்.. கேப்டன் மில்லர் படத்திற்காக நடிகர் தனுஷ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடிகளா.! வாயைப் பிளந்த ரசிகர்கள்!!
தமிழில் சாணிக் காயிதம் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இதில் பிரியங்கா மோகன், அதிதி பாலன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் 1930 -40 களில் நடந்த வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாம். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள கேப்டன் மில்லர் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது.
பொங்கலை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தில் நடிப்பதற்காக நடிகர் தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவர் இப்படத்திற்காக ரூ 20 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.