96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மனைவி ஐஸ்வர்யா ரஜினிக்காக.. மேடையில் தனுஷ் செய்த செயல்.?! நெட்டிசன்கள் கலாய்.!
பிரபல முன்னணி நடிகரான தனுஷ் 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். அதன்பின் இவர் காதல் கொண்டேன், திருடா திருடி போன்ற படங்களில் இவரின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. இந்தப் படங்களின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியது.
மேலும் 2004 ஆம் ஆண்டு தனுஷுக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா என்பவருக்கும் நவம்பர் 18-ஆம் தேதி திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த வருடம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சமூக வலைத்தளங்களில் தனது விவாகரத்தை பதிவிட்டுள்ளனர்.
இதுபோன்ற நிலையில் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது ரசிகர்களிடம் ' "எனக்காக இங்க வந்த உங்களுக்கு என்னால் எதுவும் செய்ய இயலாது பாட்டாவது பாடுகிறேன்" என்று நிஜமா நான் செஞ்ச பாவம் என்ற பாடலை பாடியிருக்கிறேன்.
தனுஷின் இந்த பாடல் அவரது மனைவி ஐஸ்வர்யாவை நினைத்து தான் பாடியிருக்கிறார் என்று ரசிகர்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது. மேலும் இவர்களின் விவாகரத்து பதிவை சமூக வலைத்தளங்களில் இருந்து இருவரும் நீக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.