திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடுத்த படத்திற்கு தயாராகும் தோனியின் தயாரிப்பு நிறுவனம்.. தீவிர யோசனையில் சாக்ஷி.!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி சாஷி இருவரும் இணைந்து தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த நிறுவனத்தின் மூலம் முதல் திரைப்படமாக எல்ஜிஎம் என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தனர். இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று படுதோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில் தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அடுத்த படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தயாரிப்பாளர் சாஷி தோனி பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.