மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரேமம் படத்தில் முதலில் மலர் டீச்சராக நடிக்க இருந்தது இந்த விஜய் பட நடிகையா! இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!!
கடந்த 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பிரேமம். இத்திரைப்படத்தில் நிவின் பாலி,சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபஸ்டியன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். இவர் நேரம் படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர். பிரேமம் படத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த கதாபாத்திரம் மலர் டீச்சர். இதில் சாய்பல்லவியின் நடிப்பு அனைவராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது.
இந்த நிலையில் அண்மையில் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் ரசிகர்களுடன் சமூக வலைதளம் வாயிலாக கலந்துரையாடினார். அப்பொழுது இயக்குனர் அல்போன்ஸ், முதலில் நான் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடிகை அசினை நடிக்க வைக்கத்தான் விரும்பினேன். அந்தக் கதையும் மலையாளத்திலேயேதான் எழுதியிருந்தேன்.
பின்னர் நடிகை அசினை தொடர்புகொள்ள முடியாத நிலையில், மலர் டீச்சர் கதாபாத்திரத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக மாற்றி எழுதினேன். பின்னரே அதில் சாய்பல்லவி நடித்தார். நான் சிறுவயதில் ஊட்டியில் படித்தேன். பின்னர் சென்னையில் கல்லூரி படிப்பை படித்தேன். அதனால் எனக்கு தமிழ் மீது ஆர்வம் அதிகம் என கூறியுள்ளார்.