முன்னணி நடிகைகளுடன் குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபல இயக்குனர்! வீடியோ உள்ளே!



Director ram gopal varma dance with actress

பல்வேறு நேரங்களில் நடிகர், நடிகைகளை பற்றி பேசி சர்ச்சைகளில் சிக்குபவர் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா. தெலுங்கு சினிமா துறையில் பல்வேறு சர்ச்சைகளில் இவரது பெயர் அடிபட்டுள்ளது. தன்மீது எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன் மனதில் தோன்றிய கருத்துக்களை பேசி வருகிறார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.

ram gopal varma

இந்நிலையில் பிரபல ஹோட்டல் ஒன்றில் கையில் பீர் பாட்டிலுடன் தனது தலையில் ஊற்றுவதும், மற்றவர்கள் மீது பீய்ச்சி அடிப்பதும், மேலும் நடிகைகளை கட்டி பிடித்து ஆடுவதுமாக இருந்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.

இந்த பார்ட்டியில் தெலுங்கு சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகைகளும் இடெம்பெற்றுள்னனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகவிருக்கிறது. இதோ அந்த வீடியோ.