#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரூ.360 கோடியை கடந்த ஷாருக்கானின் டங்கி வசூல்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
ராஜ்குமார் கிராணி இயக்கத்தில், ரெட் சில்லிஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில், நடிகர்கள் ஷாருக்கான், டாப்ஸி, விக்கி கெளசல், விக்ரம், ஜோதி சுபாஷ், தேவன் போஜானி உட்பட பலர் நடித்து, 21 டிசம்பர் 2023 அன்று உலகளவில் வெளியான திரைப்படம் டங்கி (Dunki).
டங்கி திரைப்படம் சர்வதேச அளவில் குடிபெயர்ந்து வாழும் மக்கள் சந்திக்கும் இடர் தொடர்பான கருத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாக கதைக்களம் கொண்டது.
இந்நிலையில், டங்கி திரைப்படம் உலகளவில் ரூ.360.30 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனால் இந்த ஆண்டின் வசூல் நாயகனாக, இந்திய அளவில் ஷாருக்கான் புதிய அடையாளத்தை பெற்றுள்ளார். அவரின் சொத்து மதிப்பும் ரூ.2500 கோடிகளை கடந்து இருக்கிறது.
இந்த ஆண்டில் தொடர் வெற்றியை குவித்த நடிகர் ஷாருக்கானுக்கு ஒருபுறம் ரசிகர்கள் வாழ்த்து மழையை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். இப்படம் ஹிந்தி மொழியில் மட்டும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.