மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"மாடர்ன் ட்ரெஸ்ஸில் இளைஞர்களை அசரவைக்கும் எதிர்நீச்சல் நடிகை!"
சுசி கணேசன் இயக்கத்தில் வெளியான "பைவ் ஸ்டார்' படத்தில் அறிமுகமானவர் கனிகா. ராஜஸ்தானில் உள்ள பிட்ஸ் பிலானியில் படித்துள்ள இவர், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் எதிரி, ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நல்ல குரல் வளம் கொண்டுள்ள கனிகா, சில படங்களில் நடிகைகளுக்கு பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். மேலும் சில பாடல்களையும் பாடியுள்ளார். ஒருகட்டத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கி, திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்ட கனிகா, தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
விக்ரம் நடித்த கோப்ரா மற்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என சில படங்களில் நடித்துள்ள கனிகா, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "எதிர்நீச்சல்" சீரியலில் நடித்துவருகிறார். இதில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரது புகைப்படங்களுக்காக இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் தற்போது இளம் நடிகைகளுக்குப் போட்டியாக மாடர்ன் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.