மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அது நானில்லை.. நடிகர் சார்லி கொடுத்த பரபரப்பு புகார்! அரை மணி நேரத்தில் போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை!!
சமீபகாலமாக நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்களில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகளை தொடங்கி மர்மநபர்கள் பிற நடிகர்களுக்கு மெசேஜ் அனுப்புவது, பட வாய்ப்பு தருவதாக ஏமாற்றுவது என தொடர்ந்து மோசடியில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
தற்போது தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சார்லி. இவர் இதுவரை 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது நடிகர் சார்லி பெயரில் ட்விட்டரில் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அதனை ரசிகர்களும் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சார்லி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அவர் தனக்கு ட்விட்டரில் எந்த கணக்கும் இல்லை. மேலும் பேஸ்புக், ட்விட்டர் பயன்படுத்தும் தேவையும் இதுவரை வந்ததில்லை. எனவே தனது பெயரில் தொடங்கப்பட்டுள்ள போலி டுவிட்டர் கணக்கை யாரும் தொடராதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையில் நடிகர் சார்லி புகார் அளித்த அரை மணி நேரத்தில் சைபர் கிரைம் போலீசார் அவரது பெயரில் ஆரம்பித்துள்ள போலி டுவிட்டர் கணக்கை முடக்கியுள்ளனர். இந்நிலையில் காவல்துறைக்கு நடிகர் சார்லி நன்றி கூறியுள்ளார்.