#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய்யின் கடைசி படத்தை இயக்கும் கௌதம் மேனன்? அவரே அளித்த பதில்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த தளபதி விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இதனையடுத்து வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
மேலும், அரசியலில் போட்டியிட உள்ளதால் சினிமாவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். மேலும் அவர் தற்போது நடித்து வரும் GOAT மற்றும் தளபதி 69 திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த புதிய திரைப்படங்களிலும் நடிக்கப் போவதில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் விஜயின் அரசியல் வருகை குறித்து பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், விஜய் இன்னும் நிறைய படங்களில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும், விஜய்யின் கடைசிப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் இயக்குவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கௌதம் மேனன் வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியவில்லை. ஒருவேளை கிடைத்தால் இயக்குவேன் என்று கூறியுள்ளார்.