டேட்டிங் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஹன்சிகா! உண்மை இதுதானா ?



hansika-puts-a-full-stop-to-the-dating-rumours

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ஹன்சிகா மோத்வானி. 15 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

தமிழில் இவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஈவன் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வரும்  தன்னுடைய நண்பர் சோஹைல் கதூரியா என்பவரை திருமணம் செய்து இருக்கிறார் ஹன்சிகா.

hanshikamotwani

திருமணத்திற்கு பிறகு மீண்டும் தற்போது தன்னுடைய நடிப்பு பணிகளை தொடங்கி இருக்கிறார் இவர். இந்நிலையில் ஹன்சிகா பற்றிய செய்தி ஒன்று  இணையதளங்களில் வைரலாகியது. அந்த செய்தியில் ஹன்சிகா நடிக்க வந்த ஆரம்ப கட்டத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் அவரை டேட்டிங்கிற்கு அழைத்து துன்புறுத்தியதாக அந்த செய்திகள் வெளியாகி இருந்தன. இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

hanshikamotwani

தற்போது அந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்திருக்கிறார்கள் ஹன்சிகா. இது தொடர்பாக தகவலை வெளியிட்டிருக்கும் அவர் ஒரு விஷயத்தின் உண்மை தன்மையை அறியாமல் எந்த ஒரு செய்தியையும் பரப்ப கூடாது எனவும் தெரிவித்திருக்கிறார். தனக்கு அப்படி எந்த ஒரு விஷயமும் நடக்கவில்லை எனவும் அந்த செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவின் மூலம் தன் மீது பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அவர்.