கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டிய மீன் எது தெரியுமா ?!



Health benefits in fish

நம் உடலுக்கு நன்மை தரக்கூடிய உணவுகளில் ஒன்று மீன்கள். இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவர்க்கும் விருப்பமான உணவாகும். மீன்களில் பொதுவாகவே ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.

Health

இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மற்றும் இதயம், மூளை ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் சிறந்தது. அதிகளவில் ஒமேகா 3 உள்ள சில முக்கிய மீன் வகைகளை பார்ப்போம்.

ஒமேகா 3 அதிகமாக உள்ள மீன்களில் முக்கியமானது சால்மன் மீனாகும். இதில் வைட்டமின் பி12, வைட்டமின் ஏ, பொட்டாசியம், மக்னீசியம், நியாசின், உயர் ரக புரதம் ஆகியவை உள்ளன. எனவே இது கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் ஏற்ற மீனாகும்.

Health

மேலும் கானாங்கெளுத்தி, மத்தி, நெத்திலி, ஹாலிபட், சூரை மீன், முரண் கெண்டை, ரெயின்போ ட்ரவுட் ஆகிய இந்த அனைத்து மீன் வகைகளிலும் புரதம், கால்சியம், மக்னீசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி 12, நியாசின் ஆகிய சத்துக்கள் ஏரளாமாக உள்ளன.