மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உலகநாயகன் கமல் ஹாசனை புகழ்ந்த ஹாலிவுட் நடிகர்: இதை யாருமே எதிர்பார்க்கவில்லையே.. என்ன சொன்னார் தெரியுமா?.!
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ், பிரியங்கா அருள் மோகன், சிவ ராஜ்குமார், சுந்தீப் கிஷன், ஜான் கொக்கன், எட்வர்ட் சோனென்ப்ளிக், நாசர் உட்பட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர்.
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கிறார், சித்தார்த்த நுனி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழிகளில் வெளியாகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12 ஜனவரி அன்று படம் வெளியாகிறது. படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் எட்வர்ட்டும் ப்ரமோஷன் பணிகளுக்காக சென்னை வந்திருந்தார்.
அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நடிகர் கமல் ஹாசன் குறித்து தெரிவித்தார். அவருடன் நடிக்க விரும்பியதாகவும் கூறினார். அந்த பேட்டியில், "நடிகர் கமல் ஹாசனின் மூன்றாம் பிறை படம் எனக்கு பிடிக்கும். எனது மனைவியும் அப்படத்தை விரும்பி பார்ப்பார்.
அவர் உலகமகா நடிகர். அவரை ஒரு நாளாவது நேரில் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அவருடன் நடிக்கவும் விரும்புகிறேன். அதுவே எனது ஆசை. கமல் ஹாசன் திரைத்துறையில் ஒரு முக்கிய நட்சத்திரம்" என கூறினார். இந்த காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது.
அமெரிக்க நடிகரான எட்வர்ட் தெலுங்கு, மராத்தி, ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். ஆர்.ஆர்.ஆர் படத்திலும் இவர் நடித்துள்ளார். தமிழில் இவரின் அறிமுகம் கேப்டன் மில்லர் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் #கமல்ஹாசன், அவரோட மூன்றாம் பிறை ரொம்ப பிடிக்கும் முக்கியமா என்னோட மனைவிக்கு ரொம்ப பிடிக்கும், அவர் ஒரு உலக மகா நடிகர், ஒரு நாள் அவர நேர்ல பாக்கனும் கூட நடிக்கனும் அதான் என்னோட ஆசை - ஹாலிவுட் நடிகர் @trulyedward🔥#KamalHaasan#CaptainMiller pic.twitter.com/v8EDK0w4Qp
— SundaR KamaL (@Kamaladdict7) January 6, 2024